Showing posts with label HOT NEWS. Show all posts
Showing posts with label HOT NEWS. Show all posts




















மங்காத்தா படத்திற்கு பிறகு மாஸ் இயக்குனர் வரிசையில் இடம்பிடித்து விட்டார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு பிறகு கார்த்தியுடன் இணைந்து பிரியாணி விருந்து அளித்து விட்டு, தற்போது அவருடைய அண்ணன் சூர்யாவுடன் மாஸ் காட்ட வருகிறார்.
சமீபத்தில் சூர்யா, அஜித் இருவரிடம் பணிபுரிந்தது குறித்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இவர் ‘அஜித் சார் என்னிடம் ஒன் லைன் மட்டுமே கேட்டார், உடனே நடிக்க சம்மதித்து விட்டார்.
சூர்யா சார் என முழுக்கதையையும் கேட்டு தான் நடிக்க சம்மதித்தார். ஆனால், இருவருமே தன் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தாலும், மற்றவர்கள் நடிப்பதை பார்த்து விட்டு தான் செல்வார்கள்’என கூறியுள்ளார்.


உதவியை விளம்பரமாக பயன்படுத்தும் காலத்தில், தான் செய்யும் உதவிகளை மறைத்து தன்னால் முடிந்த உதவிகளை உடன் இருப்பவர்களுக்கு செய்து வருபவர் நடிகர் அஜித்.
சமீபத்தில் தனது வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டி தந்தார்.
இந்நிலையில் தனது மேக்கப் கலைஞருக்கு ஒரு புது பல்சர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அந்த புகைப்படத்தை மேக்கப் கலைஞன் தனது சமுகவலைதளத்தில் போட்டுள்ளார்.